தீவிரமடையும் ஹிஷாலினி உயிரிழப்பு விவகாரம் - கொழும்பிலிருந்து டயகமவிறகு சென்றுள்ள பொலிஸ் குழு
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வீட்டிற்கு வேலைக்காக அழைத்து வரப்பட்ட ஏனைய சிறுமிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக, ஹிஷாலினியின் வசிப்பிடமான டயகம பகுதிக்கு கொழும்பிலிருந்து விஷேட பொலிஸ் குழு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரிஷாத் பதியுதீனின் குடும்பத்தினருக்கு வேலை செய்வதற்காக 11 சிறுமிகள் அழைத்து வரப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன் அவரது வீட்டில் கடமையாற்றிய 22 வயது யுவதியிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
