முஸ்லிம் வைத்தியரால் மரண பரிசோதனை - ஹிஷாலினியின் தாய் வெளியிட்டுள்ள சந்தேகம்
தனது மகளின் மரண பரிசோதனை முஸ்லிம் வைத்தியரொருவரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தனக்கு அதில் சந்தேகம் உள்ளதாக ஹிஷாலினியின் தாய் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீயில் எரிந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த டயகம பகுதியை சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மரணம் குறித்து அவரது பெற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஹிஷாலினியின் தாய் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், என்னுடைய மகளுக்கு நிறைய அநியாயங்கள் நடந்துள்ளன.
என் மகளை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்துள்ளனர் மின்விசிறி இல்லாமல், உணவு இல்லாமல். சரியான சித்திரவதை செய்துள்ளனர்.
என்னுடைய மகள் இவற்றையெல்லாம் மறைத்து எனக்கு வேலை செய்ய முடியாது இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என கூறினார்.
இப்பொழுது தேடிப்பார்க்கும் போது எனது பிள்ளைக்கு சரியான அநியாயம் செய்துள்ளார்கள்.
எனது மகளின் மரண பரிசோதனையில் எனக்கு சந்தேகம் உள்ளது. அதை செய்துள்ளது முஸ்லிம் வைத்தியர்.
எனவே மீள மரண பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam