இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையினால் அதிகரிக்கும் காட்டுத்தீ
இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலையினால் காட்டுத் தீ அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ அதிகரிப்பு மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இது தெரியவந்துள்ளது.
தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தோட்டங்களில் அதிகளவான தீப்பரவல்கள் பதிவாகியுள்ளதாகவும் கடந்த வருடம் பதிவாகிய 78 காட்டுத்தீயுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 123 காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நிலவும் வறண்ட காலநிலையுடன், வேண்டுமென்றே அல்லது கவனக்குறைவான மனித நடவடிக்கைகளினால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், முகாம் குழுக்கள் காரணமாகவும் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவ்வாறான காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), ஆயுதப்படைகள், தீயணைப்புப் படைகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியவை கடந்த சில நாட்களாக நிலவும் வறண்ட காலநிலை காரணமாக ஏற்படும் காட்டுத் தீயை அடக்குவதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
மேலும் எதிர்வரும் நாட்களில் தீயணைப்புப் பிரிவினரால் ஆயுதப்படை மற்றும் சிஎஸ்டி பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான சிறப்புத் திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
You may like this





சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan
