வவுனியாவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரிடம் ரி.ஐ.டி விசாரணை
வவுனியாவைச் சேர்ந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் எஸ்.தவபாலனிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் (ரிஐடி) நேற்று (08.10) விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தரும், கடந்த நாடாளுமன்ற தேர்தல் வன்னி மாவட்ட வேட்பாளருமான எஸ்.தவபாலனை விசாரணைக்கு அழைத்த பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், அவர் கடமை நிமிர்த்தம் ஓமந்தையில் நிற்பதாகத் தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாளை நினைவு கூர்ந்தமை, யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்தமை, அதனை முகப்புத்தகங்களில் பதிவேற்றியமை மற்றும் விடுதலைப் புலிகளின் மீள் நினைவூட்டல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்தே வாக்குமூலம் பெறப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.