அரிசி பிரச்சினைக்கு தீர்வு காண்பது சுலபமானதல்ல! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டில் நிலவி வரும் அரசி தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது சுலபமான காரியம் அல்ல என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி(Sunil Handunetti) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பிரச்சினைக்கு தீர்வு காண்பது சவால் மிக்கது
முன்னதாக ஒரு கையொப்பத்தில் அரிசி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்திருந்தார்.
எனினும், அரசாங்கத்தை பொறுப்பு ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது சவால் மிக்கது என தற்பொழுது குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கையொப்பத்தின் மூலம்அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண முடியும் என ஒரு பேச்சுக்கே தாம் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரிசி வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நீண்ட கால செயல்முறை எனவும் அவர் சுட்டிக் காட்டி இருந்தார். சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நாட்டின் அரிசி விற்பனையை கட்டுப்படுத்தி வருவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.