கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கு சீன அரசாங்கத்தால் அரிசி வழங்கி வைப்பு
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள், கிளிநொச்சி - கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் கடற்றொழிலாளர்களுக்கு கையளிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வானது, இன்று (26.07.2024) பிற்பகல் 1:30 மணியளவில் பரந்தன் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அரிசிப்பொதிகள் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
சீன அரசாங்கம்
அந்த வகையில், இன்று தட்டுவன்கொட்டி, நாகேந்திரபுரம், புளியம்பக்கணை ஆகிய பகுதிகளை சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு இந்த அரிசிப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நேற்றைய தினம் குறித்த அரசிப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 52 நிமிடங்கள் முன்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
