அரிசி விலையேற்றம் நியாயமற்றது – நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர்
அரிசி விலையேற்றம் நியாயமற்றது என நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்நத அழகியவன்ன (Lacannata alakiyavanna) தெரிவித்துள்ளார்.
அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்றைய தினம் அரிசிக்கான சில்லறை விலையை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கிய அரசாங்கத்தின் தீர்மானத்தினை எந்தவொரு தரப்பேனும் துஸ்பிரயோம் செய்ய முயற்சித்தால் அதனை தடுக்கவும், நுகர்வோரை பாதுகாக்கவும் அரசாங்கம் தலையீடு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுகர்வோருக்கு அரிசியை இடையூரின்றி விநியோகம் செய்யும் நோக்கில் ஒரு லட்சம் தொன் எடையுடைய அரிசி இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அரிசிக்கான சில்லறை விலையை கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளமை நியாயமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri