வட மாகாணத்தில் அரிசி விலை குறைவடையும் என அரிசி ஆலை உரிமையாளர்கள் தெரிவிப்பு
அடுத்து வரும் மாதத்திற்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வட மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன்(Ramalingam Chandrasekar), வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்(Vedanayakan) தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (21) வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.
அரிசியின் விலை
இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் மக்கள் பாதிக்கப்படுவதாக ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அரிசியை விற்பனை செய்யக் கூடிய நிலைமை இல்லாதிருப்பதற்கான காரணத்தையும் கேட்டறிந்தார்.
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் நிர்ணய விலையில் விற்பனை செய்யாமல், அவற்றின் 'லேபல்கள்' மாற்றப்பட்டு அதிகரிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.
விற்பனை
இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் இ.சந்திரசேகரன், அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமை எல்லோருக்கும் தெரியும் எனவும், அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என்பதில் அரசாங்கம் கவனத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அரிசி ஆலை உரிமையாளர்களான உங்களை நஷ்டத்தில் வீழ்த்துவதையோ மக்களை கஸ்டத்தில் வீழ்த்துவதையோ விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கம் எதிர்காலத்தில் 3 இடங்களில் புதிதாக அரிசி ஆலையை அமைப்பதற்கு திட்டமிடுவதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நெல்லை கொள்வனவு செய்தபோதும், அதை அரிசியாக்கும்போது நிர்ணயமாகும் விலையைவிட தற்போது அதிக விலைக்கே விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
