மின்சார கட்டண அதிகரிப்பால் அரிசி ஆலைகள் பாதிப்பு: அரிசி ஆலை உரிமையாளர் விசனம் (video)
மின்சார கட்டண அதிகரிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளை முன்னெடுக்க பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக அரிசி ஆலை உரிமையாளரொருவர் விசனம் தெரிவித்துள்ளார்.
நேற்று (01.02.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மின்சாரத்தில் 90 வீதமான இயந்திரங்கள் இயங்கி வருகின்ற நிலையில் மின் கட்டண அதிகரிப்பு எமக்கு பாரிய சவாலாக உள்ளது.
இது தொடர்பிலான வசதிகளை சம்பந்தப்பட்டவர்கள் செய்து தந்தால் நாங்கள் அரிசி ஆலைகளை திறம்பட செய்யக்கூடியதாய் அமையும்.
இந்நிலையில் நவீன கால அடிப்படையில் எல்லா இயந்நிரங்களும் மின்சாரத்தினால் இயங்கும் பட்சத்தில், மின் கட்டணம் அதிகரிக்குமானால் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
