தடுப்புக் காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ரியாஜ் பதியூதீன்
முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீனை தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
எனினும் அவரது பயணங்களை கொழும்பில் அவரது இல்லம் அமைந்துள்ள கொழும்பு நகர சபை எல்லைக்குள் வரையறுத்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் 11 வது ஷரத்திற்கு அமைய உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பு நகர எல்லைக்கு வெளியில் செல்ல வேண்டுமயின் குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளரது அனுமதியை பெற வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியை பெறாமல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் மனுதாரர் மாதந்தோறும் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிறுக் கிழமைகளில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக ரியாஜ் பதியூதீன் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தன்னை வடுதலை செய்யுமாறு உத்தரவிடக் கோரி ரியாஜ் பதியூதீன், உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் பணிப்பாளர், அதன் பிரதிப் பொலிஸ் மா அதிபர், பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் கைது செய்து தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சாட்சியங்களில் இல்லை எனக் கூறி விடுதலை செய்ததாகவும் எவ்வித நியாயமான காரணங்களும் இன்றி தன்னை மீண்டும் கைது செய்துள்ளதாகவும் ரியாஜ் தனது மனுவில் கூறியுள்ளார்.
அத்துடன் தற்கொலை குண்டுதாரிகளுக்கு தான் உதவியாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படையற்ற குற்றச்சாட்டின் கீழ் ரமழான் நோன்பு காலத்தில் தன்னை கைது செய்ததாகவும் இதற்கு இழப்பீடாக 5 ஆயிரம் மில்லியன் ரூபாயை வழங்குமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கேட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
