முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையில் திருத்தம்
முட்டைக்காக தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையில் அடுத்த வாரமளவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
முட்டைக்கான விலை திருத்தம்

முட்டைக்கான உற்பத்தி செலவினத்துடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை அநீதியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டைக்கான விலை திருத்தம் தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதி விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர், நுகர்வோர் அதிகார சபை, வர்த்தக அமைச்சு மற்றும் தமது சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு இடையே சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது, முட்டைக்கான உற்பத்தி செலவீனம், போக்குவரத்து மற்றும் மின்கட்டணம் என்பவற்றை கருத்திற் கொண்டு உரிய விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri