வீடமைப்பு மற்றும் உட்கட்டுமான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்
கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதியுதவியின் கீழ் நடைபெற்ற வீடமைப்பு, உட்கட்டுமாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனின் (Kanapathipillai Mahesan) தலைமையில் நடைபெற்றுள்ளது.
மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (26) இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது.
இக் கூட்டத்தில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றுவரும் வேலைகளின் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், குறித்த அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில், தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவில் நடைபெறும் வேலைதிட்டங்கள் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டதுடன், இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சின் மேலதிக செயலாளர், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வேலைகளின் பௌதீக மற்றும் நிதி நிலைமைகள் முன்னிலையில் உள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் மீளாய்வுக் கூட்டத்தில் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை, கட்டிடப்பொருட்கள் கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளரும்,பொறியியலாளருமான N.D.நர்மாரத்ண (N.D.Narmaratna), தலைமைப் பொறியியலாளர் நீத்தா பருகெடர (Neetha Parugedara), D.D.டீபாணி பிரியங்கா (D.D.Deepani Priyanka) மற்றும் A.D.நீல் பெணாண்டோ (A.D. Neil fernando) உள்ளிட்ட குழுவினர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அமைச்சின் பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்டச்செயலக பிரதம கணக்காளர் மற்றும் குறித்த அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.



காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri