எந்த வகையிலும் டொலர்கள் சீனாவை சென்றடையாது : அமைச்சர் அறிவிப்பு
கொழும்பு துறைமுக நகரம் செயற்படும் போது பெறப்படும் டொலர்கள் சீனாவிற்கு செல்லாது என அமைச்சர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு வசதிகளை வழங்கும் வளாகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இலங்கை, சீன நிறுவனத்துடன் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தற்போது டொலர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
சீனா மற்றும் அதன் முதலீடுகள் தொடர்பில் எவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும், கொழும்பு துறைமுக நகரம் செயற்படும் போது பெறப்படும் டொலர்கள் சீனாவிற்கு செல்லாது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் இவ்வாறானதொரு நிலைக்கு கொண்டு வரப்படும் போது, அந்த வசதி மூலம் நாட்டிற்கு ஒரு டொலர் வரவை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் பிளேக் ஆய்வகத்தில் கசிந்த பாக்டீரியா; ஒருவர் உயிரிழப்பு, கண்காணிப்பில் 200 பேர் News Lankasri
விமானம் தரையிறங்கும் துல்லியத்தை 4 மடங்கு உயர்த்திய ரஷ்ய விஞ்ஞானிகள் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பு News Lankasri
3 வருடத்திற்கு முன் விபத்தில் உயிரிழந்த அசுரன் பட நடிகர்... திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை, வெளிவந்த உண்மை Cineulagam