323 கொள்கலன்கள் குறித்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும்
துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான உண்மைகள் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
எவ்வித பரிசோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்ட சிகப்பு லேபள் இடப்பட்ட 323 கொள்கலன்கள் தொடர்பிலான விடயங்களை வெளிப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கொள்கலன்களை விடுவித்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது அம்பலப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதனை அரசாங்கம் உடனடியாக அடையாளப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் காரர்கள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளை போன்று இந்த சிகப்பு லேபிளிடப்பட்ட கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மொரட்டுமுல்ல பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இந்த விடயங்களை இன்று தெரிவித்துள்ளார்.
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan