அமெரிக்காவுக்கு சகோதரனை அனுப்ப கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற பெண்கள் பலி
அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்த சகோதரனை மீண்டும் நாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனுப்பி விட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை, அம்பன்பிட்டிய பிரதேசத்தில் லொறியொன்று வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் படுகாயம் அடைந்த மற்றுமொரு பெண் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பெண்கள் பலி
கடந்த 27ஆம் திகதி அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியை சேர்ந்த, இரு பிள்ளைகளின் தாயான 69 வயதுடைய ஓய்வுபெற்ற உதவி ஆசிரியை சந்திரவதி குலதுங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆசிரியையின் 2 பிள்ளைகளும் பிரித்தானியாவில் வசித்து வருகின்றனர். உயிரிழந்த ஆசிரியையின் மூத்த சகோதரர் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.
சகோதரர் மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கொழும்பு சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் உயரிழந்த மற்றுமோரு பெண் ஆசிரியையின் தம்பியின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.