ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் மீண்டும் சேவையில் இணைப்பு
ஓய்வு பெற்றுக்கொண்ட ஆங்கில பாட ஆசிரியர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு ஓய்வு பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் மீளவும் கடமையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.
ஆசிரியர் பற்றாக்குறை
தரம் 6 முதல் தரம் 11 வரையிலான மாணவர்களுக்கு கற்பிக்கும் நோக்கில் ஓய்வு பெற்றுக்கொண்ட ஆங்கில பாட ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளனர்.
ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அனுமதி
ஓய்வு பெற்றுக்கொண்ட போது செலுத்தப்பட்ட சம்பளத்திற்கு மேலதிகமாக இவர்களுக்கு வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னதாக இந்த ஆங்கில பாட ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் மேல் மாகாணத்தில் இணைத்துக்கொள்ளப்பட உள்ள பட்டதாரி ஆசிரியர்களின் எண்ணிக்கை ஐயாயிரமாக அதிகரிக்கப்பட உள்ளது.