உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் - இஸ்ரேல் புலனாய்வுப்பிரிவு பற்றி விசாரணை வேண்டும் - ஹக்கீம் எம்.பி
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவும் இருந்துள்ளது. இது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்." என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்து எனது உரையின்போது இதற்கு முன்னரும் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளேன்.
இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவு இதன் பின்னணியிலிருந்துள்ளது என்பதற்கான தகவல்கள் உள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இது பற்றியும் ஆராயப்பட வேண்டும். அதேவேளை, இளம் முஸ்லிம் கவிஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.
அரசின் இவ்வாறான அணுகுமுறையால் நம்பகத்தன்மை ஏற்படுகின்றது" எனத் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
