உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவல்
2020 ஆம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சையின் சித்தி பெறுபேறு தர நிர்ணயங்கள் இந்த முறை வெளியிடப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
2020 ம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சையின் பெறுபேறுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் 2019 ம் ஆண்டு உளவியல் நிபுணர் ஆலோசனைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சிறந்த மாணவர் தர நிர்ணய முறையை வெளியிடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 2020 ம் ஆண்டுக்கான கபொத உயர்தர பரீட்சையின முடிவுகள் செயல்திறன் சோதனையாக மட்டுமே கருதப்படும், மாறாக நாடளாவிய ரீதியில் தர வரிசைகள் அறிவிக்கப்படமாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட மற்றும் நாடளாவிய தரப்படுத்தல் பல்கலைக்கழக சேர்க்கைகளின் போது
மட்டுமே கவனத்தில் கொள்ளப்படும். தர நிர்ணயங்கள் வெளியிடப்படும் போது பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்க
முடியாத மாணவர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சணத் பி பூஜீத தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam