க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் காலத்தாமதத்துடன் இடம்பெறுவதனால் மாணவர்களின் பெறுபேறுகளை உரிய திகதியில் வெளியிட முடியாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை
ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்த்தரப் பரீட்சைக்கான திகதியில் மாற்றத்தை ஏற்படுத்த நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 2023 ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா லட்சுமி நிஜத்தில் என்ன வேலை செய்கிறார் தெரியுமா.. மாமன் படத்தில் அப்படி நடிக்க இதுதான் காரணமா Cineulagam
