குறைக்கப்படும் கட்டணம்: நாடாளுமன்றில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீளப் பெறுவதற்கு அறவிடப்படும் கட்டண குறைப்பு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (24.11.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மின் இணைப்புக்களை மீளப் பெறுவதற்கான கட்டணம்
அத்துடன் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளை மீளப் பெறுவதற்கு அறவிடப்படும் 3000 ரூபா கட்டணத்தை மின் கட்டணத்தின் பெறுமதிக்கு ஏற்ப குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை தற்போது நீர் மின் உற்பத்தியானது அதிகபட்ச மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |