யாழில் பழுதடைந்த கொத்து ரொட்டி! உணவகத்திற்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ்.ஆனைப்பந்தியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கொத்து ரொட்டி வாங்கிய ஒருவர் பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து ரொட்டி காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த 09ஆம் திகதி இடம்பெற்றதையடுத்து குறித்த முறைப்பாடை அளித்துள்ளார்.
இதன்பேரில் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் மாநகர பொது சுகாதார பரிசோதகர்கள் குழு குறித்த கடையினை பரிசோதித்துள்ளனர்.
நீதிமன்ற மீள் விசாரணை
இதன்போது பல்வேறு குறைபாடுகள் இனங்காணப்பட்ட நிலையில் உணவகத்திற்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் பு.ஆறுமுகதாசனால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் கடை சீல் வைக்கப்பட்டது.
இது தொடர்பில் இன்றையதினம் (26.05.2023) வழக்கு நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அத்துடன் உணவக உரிமையாளரிற்கு எதிராக சுமத்தப்பட்ட 09 குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என இனங்கண்ட நீதிமன்றம் 45,000 ரூபாய் தண்டம் விதித்துள்ளது.
மேலும்,கடையில் சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கடையினை மீள திறக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
