மட்டக்களப்பில் உணவகம் ஒன்றிற்கு சீல் வைப்பு
மட்டக்களப்பு-தொடருந்து வீதியில் மனித பாவனைக்கு உதவாத உணவுகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்ட உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கையானது நேற்றையதினம்(8) பொது சுகாதார பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த உணவகம் தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கோட்டமுனை பொது சுகாதார பரிசோதகர் தவராஜா மிதுன்ராஜ் தலைமையில் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.கஜனன் குறித்த உணவகத்தை சம்பவதினமான நேற்று பகல் முற்றுகையிட்டனர்.
சீல் வைப்பு
இதன்போது அங்கு மனித பாவனைக்கு உதவாத உற்பத்தி செய்த உணவான 6 கிலோ சோறு, 2 கிலோ பெரித்தகோழி, 2 கிலோ மீன் பெரியல், 3 கிலோ சமைத்த மீன், 3 கிலோ பழுதடைந்த வெங்காயம், போன்ற உணவுகளை மீட்டனர்.
இதனையடுத்து உணவக உரிமையாளருக்கு எதிராக மனித நுகர்வுக்கு பொருத்தம் இல்லாத உணவு உற்பத்தி செய்தமை, உட்பட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் உணவக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து குறித்த உணவகத்தை தற்காலிகமாக எதிர்வரும் 10 திகதி வரை மூடுமாறு நீதிமன்ற நீதவானின் கட்டளையையடுத்து உணவகத்தை பொது சுகாதார பரிசோதகர்கள் மூடி சீல் வைத்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
