யாசகரை தாக்கிய உணவக உரிமையாளர் கைது
உணவகத்திற்கு எதிரில் சக்கர நாற்காலியில் யாசகம் பெற்ற யாசகர் ஒருவரின் மூன்று பற்கள் உடையும் அளவுக்கு தாக்கி, சக்கர நாற்காலியையும் சேதப்படுத்திய பாணந்துறையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றின் உரிமையாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறை மஹவில பிரதேசத்தில் பிரபல உணவகம் ஒன்றை நடத்தி வரும் உரிமையாளர், அவரது சகோதரர் மற்றும் உணவகத்தின் ஊழியர் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
உணவகங்களுக்கு எதிரில் யாசகம் பெற்று வந்த நபர்
தாக்குதலுக்கு உள்ளான மஹவில பிரதேசத்தை சேர்ந்த நபரின் மனைவி செய்த முறைப்பாட்டுக்கு அமைய இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான நபர் தென்னை மரத்தில் இருந்து விழுந்ததில் அவரது இடுப்பு உடைத்துள்ளதுடன் வாகன விபத்துக்கு உள்ளாகி ஒரு கால் அகற்றப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொழில் எதனையும் செய்ய முடியாததால், சக்கர நாற்காலியில் அமர்ந்து உணவகங்களுக்கு எதிரில் யாசகம் பெற்று வந்துள்ளார்.
இவ்வாறு யாசகம் பெற்றுக்கொண்டிருந்த போதே அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான யாசகர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். சம்பவம் குறித்து பின்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா? News Lankasri
