மர்ம நோய்களால் பாதிக்கப்படும் முன்னாள் போராளிகள் - தவிசாளர் எடுத்துள்ள அதிரடி முடிவு
கரைச்சி பிரதேச சபையில் கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆய்வு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டமானது, கரைச்ச பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், அதன் பின்னர் ஊடக சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 21.05.2026 திகதி நடைபெற்ற பிரதேச அமர்வின் பொழுது பிரதேச சபையில் உறுப்பினராக இருப்பவரும் முன்னாள் போராளி பிரதேச சபை உறுப்பினர் ஜீவா முன்வைக்கப்பட்ட பிரேரணை கடந்த மாதம் 21 05.2026ஆம் திகதி நடைபெற்ற கரைச்சி பிரதேச சபையின் சபை அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரேரணையாக, கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் வாழுகின்ற முன்னாள் போராளிகள் பலர் 16 ஆண்டுகளாக சொந்த காணி மற்றும் சொந்த வீடு நிலம் இல்லாத நிலைமையில் பெரும் அல்லல் பட்டு வருகிறார்கள்.
மர்மமான நோய் தாக்கப்படும் முன்னாள் போராளிகள்
அவர்களுக்கு திடீர் திடீரென மர்மமான நோய் தாக்கம் இருப்பதால், திடீர் மரணங்கள் கூட ஏற்படும் நிலை உள்ளது. அதே சமயம், புணர்வாழ்வு நிலையங்களில் தமது எந்தவித அனுமதியும் இன்றி தமக்கு இதற்காக ஏன் ஊசிகள் ஏற்றப்படுவது என்று தெரியாமலே தமக்கு ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் அங்குள்ளவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்பொழுதும் கூட பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என பெரும் அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பாக தற்பொழுது கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்களாக இருக்கின்ற முன்னாள் போராளிகள் பலர் தமது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் போராளிகள் நலம்புரிச் சங்கம் விசிட கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளதாகவும், முன்னாள் போராளிகளின் ஊசி ஏற்றப்பட்டமைக்கான காரணத்தை மருத்துவ பரிசோதனையின் மூலம் கண்டறிய கூடிய ஏதேனும் ஒரு வழியினை பரிசோதனைக்கு உட்படுத்த முடியுமா என பிரேரணையில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க குறித்த பிரேரனை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராளிகளின் நலன் கருதி வீட்டு வசதி இல்லாத முன்னாள் போராளிகள் மற்றும் நோய்வாய் பட்டிருக்கும் போராளிகள் தமது மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் மற்றும் வீடு காணி அற்றவர்கள் அவர்களுக்கான வீடு காணியினை பெற்று தருவதற்காக துறை சார்ந்த திணைக்கலங்களின் உதவினையும் பெற்று மருத்துவ பரிசோதனை ஒன்றையும் நடத்துவதற்கு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வட மாகாண ஆளுநரின் அனுமதியோடு இந்த விடயம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், பிரதேச சபை உறுப்பினர்களை தொடர்புக் கொண்டு இந்த விடயம் தொடர்பான பதிவினை பெற்றுக் கொள்ள முடியும்.
சடலங்களின் இறுதி கிரியை தொடர்பான தீர்மானம்
கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் 40க்கு அதிகமான சடலங்கள் எரிப்பதற்கு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் காணப்படுகின்ற மயானங்களில் இறந்தவர்களை எரியூட்டுவதோ அல்லது நல்லடக்கம் செய்வதோ தொடர்பாக பிரதேச சபையின் முன் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.
அதே போன்று, பட்டாசு கொளுத்துகின்ற நடைமுறை மரணம் நிகழ்கின்ற வீட்டின் ஒரு முறையும் இறுதிக்கிரீர்கள் நடைபெறும் பகுதியில் ஒருமுறை மாத்திரமே பட்டாசுகளை கொளுத்த முடியும் எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரண நிகழ்வின் போது இசைக்கப்படுகின்ற அமங்கல வாத்தியத்தை இறந்த சடலத்தை வீதிகளில் கொண்டு செல்லும் பொழுது ஓரிடத்தில் தரித்து நிற்காது இறந்தவர் வீட்டிலிருந்து மயானம் வரை தரித்து நிற்காது செல்ல வேண்டும் என்றும் காடாத்துகள் செய்வதற்காக காலை தொடக்கம் மாலை 7 மணி வரை மயானத்துக்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் மயானத்துக்குள் செல்வதற்கு இவருக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், இறந்தவரின் சடலத்தினை கொண்டு செல்வதற்காக வழித்தட அனுமதி பெற்றிருத்தல் வேண்டும், இதுபோன்ற நடைமுறைகளை மீறுபவர்களின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.