மீண்டும் அதிகரிக்கவுள்ள கோதுமை மாவின் விலை! தயாராகும் நிறுவனங்கள்
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்தன.
இன்றைய நாட்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.
பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது பல சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
சில பேக்கரி உரிமையாளர்கள் மீன் ரொட்டியை 120 ரூபாய்க்கும், ஒரு சாண்ட்விச் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்வதால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு கிலோ சீனியின் விலை 250 ஆகவும், ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் ரூ.1100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

டிஆர்பியில் முன்னேறி வரும் விஜய் டிவியின் புதிய சீரியல்.. கடந்த வாரத்திற்கான டாப் 5 சீரியல் Cineulagam

RCB-க்கு எதிராக விளையாட வருமாறு தினமும் 150 அழைப்பு வருகிறது - அவுஸ்திரேலியா வீரர் பென் கட்டிங் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri
