மின் கட்டண அதிகரிப்பு! விரைவில் வெளியாகவுள்ள தீர்மானம்
மின்சார கட்டண அதிகரிப்பு தொடர்பான தீர்மானம் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை உயர்த்துமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் வெளியாகும் அறிக்கை

குறித்த கோரிக்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகள் ஆராயப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், திருத்தங்கள் செய்யப்படுமாயின் மின்சார சபையுடன் கலந்துரையாடி அடுத்த மாதம் 15 ஆம் திகதி அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனக ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய போதிலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
ரஜினி சார் மீது இருக்கும் மரியாதைக்காக ஒதுங்குகிறேன்.. தனுஷ் ஓம் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு Cineulagam
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri