ஏறாவூர் நகரசபை நிருவாக பிரிவில் 18 துணை சட்டங்களை உருவாக்க தீர்மானம்
ஏறாவூர் நகர சபை நிருவாகப்பிரிவில் நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கு நகரசபை நிருவாகம் தீர்மானித்திருப்பதாக அந்நகர சபையின் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக் தெரிவித்துள்ளார்.
நகரசபை கட்டளைச் சட்டம் 225 இன் கீழ் இந்த முன்னெடுப்பு இடம்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் நகரசபையின் மாதாந்த அமர்வு இன்று நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில் நகரசபை சபா மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஏறாவூர் நகர சபை நிருவாகப் பிரிவில் நகரசபைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 18 துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கு நகரசபை நிருவாகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி நகரசபைப் பிரிவில் வீதிகள் மற்றும் தெருக்களில் காட்சி நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது பற்றிய துணை விதி, தங்குமனைகள் தங்குமிடங்கள் பொதுச் சுகாதார பாதுகாப்பு வசதிகளை முகாமைத்துவம் செய்தல், கட்டுப்படுத்துதல் உணவகங்கள் ஊறுவிளைவிக்கும் மற்றும் ஆபத்து மிக்க வியாபாரம் தொடர்பான துணைவிதி, தனியார் கல்வி நிறுவனங்கள் சிகை அலங்கார நிலையங்கள் தொடர்பான துணை விதி உள்ளிட்ட 18 துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கே ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய பரிந்துரைகளோடு தமது ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஏறாவூர் நகர உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.







மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
