ஐ.தே.கவுடன் இணைய சில கட்சிகள் தீர்மானம்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கிய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் தம்முடன் இணைந்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் தேசிய கட்சி, தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, முற்போக்கு மக்கள் சேவையாளர் கட்சி, ஶ்ரீ ரெலோ, ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம், ஐக்கிய இலங்கை முன்னணி, இலங்கை ஐக்கிய சமாதான கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்றுள்ளது.

நாட்டுக்குப் பயனுள்ள அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பிரதமர் ரணில்
விக்ரமசிங்கவுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க குறித்த கட்சிகள் இணக்கம்
தெரிவித்துள்ளன என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு
தெரிவித்துள்ளது.
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri