இலங்கை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் பணி நிறுத்த நடவடிக்கையை தொடர தீர்மானம்
கல்வி அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் தோல்வியுற்றதால், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்கள் தங்களது பணி நிறுத்த நடவடிக்கையைத் தொடர தீர்மானித்துள்ளன.
இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கங்கள் பொதுச்செயலாளர் மஹிந்த ஜெயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விபரங்களை அமைச்சர் ஜி எல் பீரிஸ் வெளியிட விரும்பவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அமைச்சருடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை என்றும் ஜெயசிங்க தெரிவித்தார்.
இந்த நிலையில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் மற்றொரு அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைக்கவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்ததாகவும் ஜெயசிங்க கூறியுள்ளார்.
எனவே, தொழிற்சங்கங்கள் தொடர்ந்தும், இணையம் மூலமான கற்பித்தலை பகிஸ்கரிக்கும் நடைமுறைகளைத் தொடர முடிவு செய்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கங்கள் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
