பிரதேச சபை உறுப்பினரை மக்கள் பணி செய்ய விடாது தடுத்த அதிகாரிக்கு எதிராக தீர்மானம்
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேசத்தில் அரச உத்தியோகத்தர் ஒருவரை வேலை செய்ய விடாது தடுத்துவருவதாக எதிர்ப்பு தெரிவித்து கரைத்துறைப்பற்று பிரதேச சபை அமர்வில் விசேட தீர்மானமாக கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் நேற்று(24.03.2026) இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட தீர்மானம்
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு மாவட்ட நில அளவைத் திணைக்களத்தின் சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், அரச சுற்றுநிருபம் 12/2021 இற்கமைவாக கடமை விடுமுறை பெற்று மக்கள் சேவையில் ஈடுபட அனுமதிக்காமல், அவரது ஜனநாயக உரிமைகளை பல்வேறு வழிகளில் தொடர்ந்து தடுப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நில அளவையாளர் நாயகத்திடம் எழுத்து மூலம் அறிவித்து அனுமதி கோரப்பட்டதுடன், அதற்கு சாதகமான பதில் கிடைத்திருந்தாலும், மாவட்ட சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமை, ஜனநாயக சோசலிசக் குடியரசில் ஜனநாயகத்திற்கு எதிரான பாரிய சவாலும் அச்சுறுத்தலும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஜனநாயக முறையில் மக்கள் சேவையில் ஈடுபடுவதற்கு இடையூறு விளைவிக்கும் முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகரின் செயல்களை கண்டித்து, சபையில் கண்டனத் தீர்மானம் ஒன்றை உறுப்பினர் த. அமலன் முன்மொழிந்தார்.
அத்தீர்மானம் சபையால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
மேலும், இத்தீர்மானத்தை ஜனாதிபதி, காணி அமைச்சர், உள்ளூராட்சி அமைச்சர், நில அளவையாளர் நாயகம், வடக்கு மாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைக்கவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது.
தீவிரமடையும் மோதல்: எரிபொருள் இறக்குமதிக்கு பாதிப்பு..! அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு விசேட அறிவிப்பு
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam