இப்படியும் நல்ல மனிதர்களா......! பொலிஸ் அதிகாரிகளின் நெகிழ்ச்சியான செயல்
பாதுக்க பிரதேசத்தில் ஒரு வருடம் பாடசாலை செல்லாத 3 பிள்ளைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் நெகிழ வைக்கும் செயல் ஒன்று பதிவாகி உள்ளது.
குடும்ப வறுமை காரணமாக பாடசாலை செல்ல முடியாத 3 பிள்ளைகளுக்கு உதவும் வகையில் அவர்களின் தலை முடிவை வெட்டி, உணவிற்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கு பாதுக்க பொலிஸ் தலைமை அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
குடும்ப வறுமை
மேலும் 3 பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்து சென்று அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுத்துள்ளதுடன், பாடசாலை செல்வதற்கான பேருந்து பயண சீட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
6,8,9 வயதுடைய பிள்ளைகள் மூவர் நீண்ட காலமாக பாடசாலைக்கு வருவதில்லை என பாடசாலை தரப்பில் இருந்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் செயல்
கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸார் அந்த பிள்ளைகளின் வீட்டிற்கு சென்ற போது அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
பிள்ளைகள் பாடசாலைக்கு செல்ல முடியாத அளவு குடும்பத்தில் நெருக்கடி உள்ளதென அறிந்த பொலிஸ் அதிகாரிகள், பிள்ளைகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து பாடசாலைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
