நகரசபை உறுப்பினர்களை பதவி விலக கோரியமையானது தவறான தகவல் - தமிழரசுக்கட்சியின் செயலாளர் ப. சத்தியலிங்கம்
வவுனியா நகரசபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களைப் பதவி விலகி புதியவர்களை நியமிக்க வழிவிடுமாறு தான் கோரியதாக வெளிவந்துள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வவுனியா மாவட்ட தலைவருமான ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியா நகரசபையில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களான பரதலிங்கம், இராசலிங்கம், சுமந்திரன், சேனாதிராஜா ஆகியோரை பதவி விலகுமாறு ப. சத்தியலிங்கம் தெரிவித்ததாகச் செய்திகள் வந்திருந்த நிலையிலேயே அவர் இதனை மறுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சியின் நகரசபை உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு நான் கோரியதாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை. உள்ளுராட்சி மன்றங்களில் பல கட்சிகள் தமது உறுப்பினர்களை மாற்றம் செய்து வருகின்றது.
அந்தவகையில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களான ப. சத்தியநாதன் மற்றும் மங்களநாதன் ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் பதவி விலகி புதியவர்களுக்கு வழிவிட்டிருந்தனர்.
இவ்வாறான முடிவு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானமே.
அந்தவகையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் கட்சி ரீதியில் எடுக்கப்பட்ட
தீர்மானமொன்றினை தற்போது என்னைச் சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளமை
தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
