கிளிநொச்சி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து விசேட கலந்துரையாடல்(Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்ற பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளின்போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று(17.08.2023) மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்ணிவெடி அகற்றல்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது மீள்குடியேற்ற பகுதிகளான பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, இத்தாவில், வேம்பொடுகேணி ஆகிய பகுதிகளில் கண்ணிவெடி அகற்றல் இடம்பெற்றுவருகின்றது.
இது தொடர்பான விடயங்களை குறித்த பகுதிகளில் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நிறுவன அதிகாரிகள் கலந்துரையாடலின் போது தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், குறித்த பகுதிகளில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கள விஜயம்
இந்நிலையில் எதிர்கால நடவடிக்கைகளுக்கு முன்னேற்பாடாக துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் அடுத்த வாரத்தில் குறித்த பகுதிகளுக்கு கள விஜயமொன்றை முன்னெடுப்பதாகவும் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பகுதிகளிலிருந்து கடந்தகால அசாதார சூழ்நிலை காரணமாக 172 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் 65 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.















யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri
