சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு
நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் காணப்பட்ட சாய்ந்தமருது தோணா அபிவிருத்தி திட்டமானது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சாய்ந்தமருது நகரத்திற்கு அழகு சேர்த்த தோணாவும் அதனை அண்டிய பிரதேசங்களும் அரசியல் தலைவர்களின் பாராமுகமும், தோணா அபிவிருத்தியை புறக்கணிக்க செய்திருந்தது.
இந்நிலையில் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தற்போது துரித அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
தோணா அபிவிருத்தி
குறித்த தோணா அபிவிருத்தி தொடர்பில் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று ( 05) சாய்ந்தமருது தோணாவையும் அண்டிய பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் சாய்ந்தமருது பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வின் இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சபான் தலைமையில் குழு ஒன்று கள விஜயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த கள விஜயத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பாறை மாவட்ட பிரதி பணிப்பாளர் நிசாந்த குருநெரு, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை அலுவலக பொறுப்பாளர் வீரவாகு ,நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்ட நடைமுறையாக்கல் உத்தியோகத்தர் ஜெ. தியாகராஜா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் படவரைஞர் எம்.சி.எம்.சி. முனீர் , தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.எம்.முஸம்மில், மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எல். அப்துல் றசீட் , சாய்ந்தமருது பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அலுவலர் எம்.எச். முபாறக் ,ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |