ஆழ்துளை கிணற்றில் உயிருக்கு போராடும் சிறுவன்! - மீட்பு பணிகள் தீவிரம்
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கிணற்றில் ஆறு வயது சிறுவன் சிக்கியுள்ள நிலையில், மீட்புப் படையினர் அவரைக் காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மொராக்கோ நாட்டில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து ஐந்து நாட்களாக உயிருக்கு போராடிய 5 வயதான ராயன் என்ற சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவம் உலக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது உயிருக்கு போராடும் சிறுவனை மீட்க அவசரகால பணியாளர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஹைதர் என்ற அந்த சிறுவன், நாட்டின் தெற்கில் உள்ள ஷோகோக் என்ற தொலைதூர ஆப்கான் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தையின் உடலின் மேல் பகுதி மட்டும் நகரும் வகையில் கிணற்றில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் உதவிப் பணியாளர்களும் புதிய தலிபான் அரசாங்க அதிகாரிகளும் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த சிறுவன் கண்ணீருடன் தனது தந்தையுடன் பேசும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வைராலாகியுள்ளது.
#Haidar is still stuck. These rescuers are still trying to save him deep in the night. Please pray for #Haidar! #SaveHaidar #حيدري_وژغورئ pic.twitter.com/CQtPBya85R
— Sangar | سنګر پیکار (@paykhar) February 17, 2022