புஸல்லாவ பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு
புஸல்லாவ பிரிவிற்குட்பட்ட நயப்பனை மேற்பிரிவில் சுமார் மூன்று அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை பொது மக்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
சிறுத்தைகளின் நடமாட்டம்
மிக நீண்ட காலமாக நயப்பனை தோட்டத்தில் சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்பட்ட நிலையில் சம்பவ தினத்தன்று காலை இந்த சிறுத்தை விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளது.
தற்போது வீடுகளுக்கு அருகில் இந்த சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுத்தையின் உடல் கம்பளையில் உள்ள வனஜீவராசி தினைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
