முதியவரொருவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி - பரந்தன் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து இன்று (01-11-2022) முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் பகுதியிலுள்ள தனியார் விடுதியொன்றில் தனிமையில் தங்கியிருந்த முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த முதியவர் மேற்படி விடுதியில் தங்கி இருந்து கடந்த வெள்ளிக்கிழமை வரையும் குடும்பத்துடன் தொடர்பில் இருந்துள்ளார், அதன் பின்னர் தொடர்பு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதியில் துர்நாற்றம் வீசுவது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 71 வயதுடைய சின்னையா நாகலிங்கம் என்ற முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி முதியவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடற்படை வீரர் மரணம்
இன்று (01) காலை, காங்கேசன்துறை கடற்படையினர் விடுதியில் இருந்து கடற்படை வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கண்டியைச் சேர்ந்த சன்னி அப்புகே சுரங்க ரொசாந்த சில்வா என்ற 34 வயதுடைய கடற்படை வீரரே இவ்வாறு திடீரென மரணமடைந்தார்.
அவரது சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மரண விசாரணையை
வலிகாமம் கிழக்கு திடீர் மரணவிசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன்
பிரேத பரிசோதனைக்காக சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
