புத்தளத்தில் இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு (Photos)
புத்தளம் பகுதியில் இன்று (18.10.2023) காலை இனந்தெரியாத ஆணொருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் - கொழும்பு முகத்திடலில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டதை அவதானித்த அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்குத் தகவலை வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் தடவியல் பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டனர்.
பிரேத பரிசோதனை
பின்னர் குறித்த சம்பவ இடத்திற்கு புத்தளம் கற்பிட்டிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.
சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மற்றும் தடவியைல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
