வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விகாரைகள் தொடர்பில் தேரர் விடுத்துள்ள வேண்டுகோள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் மகாநாயக்கர்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .
தொல்பொருள் ஆய்வு தொடர்பில் பிரபலமான எல்லாவல மேதானந்த தேரர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விகாரைகளின் உரிமை தொடர்பாக முறையான திட்டம் ஒன்று நிகாயக்களின் உச்சபீடத்துடன் கலந்தாலோசித்து தயாரிக்கப்பட வேண்டுமென அவர் கடிதம் ஒன்றின் மூலம் மகாநாயக்க தேரர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேரர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்
வடக்கு, கிழக்கில் வழிபாட்டுச் சிதைவுகள் உள்ள இடங்களின் உரிமைகளுக்காக பிக்குகள் தன்னிச்சையாக செயற்பட்டால் பிரச்சினைகள் ஏற்படும் எனவும் அவர் மகாநாயக்கர்களுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறு செயற்படும் போது, புராதன பொக்கிஷங்கள் அழிந்துபோவதுடன், பிக்குகள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பும் என்று கூறும் எல்லாவல மேதானந்த தேரர், மகாநாயக்கரின் அறிவு மற்றும் வழிகாட்டலின் கீழ் அவ்வாறான இடங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்




