சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவுமாறு அமைச்சர் நஸீர் அஹமட் கோரிக்கை (Photos)
இலங்கை முன்னெடுக்கும் சுற்றாடல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதியதவி வழங்குமாறு, இலங்கைக்கு உதவி வழங்கும் முகவர் நிலையங்களை சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.
நிதியுதவி வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட்ட சந்திப்பிலே அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

சுற்றாடல் திட்டங்களுக்கான நிதி
சுற்றாடல் திட்டங்களுக்கான நிதியைப் பெறும் இலக்குகள் நோக்கி இலங்கை நகர வேண்டியுள்ளது. இது குறித்து அதிக கவனம் செலுத்துவதுடன் பயிற்சியிலும் ஈடுபடுவது அவசியம்.
இதனால் கிடைக்கும் அனுபவங்கள் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள சுற்றாடல் திட்டங்களுக்கு பலம் சேர்க்கும்.
சுற்றாடலை அபிவிருத்தி செய்வதற்கான உண்மையான இலக்குகளை கண்டறிவது தான் இச்செயற்றிட்டத்தின் பிரதானம்.
இதனால், இதற்குத் தேவையான நிதிகள் இச்செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் பாதிப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
இக்கூட்டத்தில் பங்கேற்ற சுற்றாடலை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் பங்காளர்கள் தங்களது அனுபவங்கள், இத்திட்டத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன் வைத்திருந்தனர்.
இதைக் கவனத்தில் கொண்ட அமைச்சர் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடத்தப்படும் கூட்டங்களில் அவசியம் கலந்து கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும், இவ்வாறான திட்டங்களுக்கு உதவியளித்த முகவர் நிறுவனங்களுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, UNDP, INCU, UN Environment Programmer, UNIDO, GGGI, Food and Agriculture Organization, EU and ICRA ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 8 மணி நேரம் முன்
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan