மாகாணசபைத் தேர்தல் வேண்டாம் என்று கூக்குரலிட்டவர்களே இன்று நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்: நசீர் அஹமட் சாடல்
மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று கூக்குரலிட்டவர்களே இன்று நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் என வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட்(Nazeer Ahamed), சாடியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பும்(TNA) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) கட்சியுமே மாகாண சபைத் தேர்தல் நடத்தக் கூடாது. தேர்தலை ஒத்திப் போடுமாறு அன்று கூக்குரலிட்டனர்.
ஆனாலும் அவர்கள் தான் இன்று அதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்று வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் நசீர் அஹமட் தலைமையில் நேற்று(07.05.2014) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
சுற்றுலா வலய மையப்பகுதி
இந்நிகழ்வில் ஆளுநர் நசீர் அஹமட் கருத்து தெரிவிக்கையில்,
"சுற்றுலாத்துறை மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது. அதனை மேம்படுத்தி வடமேல் மாகாணத்தில் புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளோம்.
குருநாகல் ஒரு சுற்றுலா வலய மையப்பகுதியாகும். இன்று தம்புள்ளைக்கு எத்தனை சுற்றுலாப் பயணிகள் செல்கின்றனர்? இதன் மூலம் ஹபரனா நாம் என்ன செய்ய வேண்டும்?" இதனை நாம் சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டும்.
எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள குருநாகல், தம்பதெனிய போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ரணில் விக்ரமசிங்க
அத்துடன், இந்த நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்திருந்த போது, அதனை நிலை நிறுத்திய ஒரே தலைவர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே(Ranil Wickremesinghe).
சஜித் பிரேமதாசவிடம் கூறினார், ஆனால் அவர் இந்த நேரத்தில் ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைக் கைப்பற்ற முன்வரவில்லை.
மாகாண சபைகளை நடத்தக் கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தான் அன்று எவ்வளவோ கூச்சலிட்டனர்.
இன்று அவர்களே மீண்டும் மாகாண சபைத் தேர்தலிலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |