நடுக்கடல் கைதுகளை தடுக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை
நடுக்கடலில் தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வது இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுவதாக உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடற்படையினர் கைது
''புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு தொழிலுக்கு சென்ற 21 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, 4 இயந்திர படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த 425 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர், இந்த ஆண்டு ஜூன் 16ம் திகதி கைது செய்துள்ளனர்.
அத்துடன் 58 படகுகளை சிறை பிடித்துள்ளனர். இதில் 131 கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்ய நடவடிக்கை
இந்தநிலையில் இலங்கையின் சிறைகளில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விரைவில் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
[https://www.whatsapp.com/channel/
இதுபோன்ற நடுக்கடல் கைதுகளைத் தவிர்க்க இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |