திருகோணமலையில் தீர்க்கப்படாத குப்பை மேடு பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு கோரிக்கை (Photos)
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட பாலம்போட்டாறு பத்தினிபுரம் மக்களின் தீர்த்து வைக்கப்படாத குப்பைமேடு பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாத நிலையில் உள்ளதாகவும் அப்பிரச்சினையைத் தீர்த்து வைக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் அமைந்திருக்கும் பாலம் போட்டாறு குப்பைமேட்டுக்குப் பல இடங்களிலிருந்து கொண்டு வரும் குப்பைகளை வீதியோரத்தில் கொட்டுவதால் யானைகளில் தொந்தரவுகள் அதிகரித்து வருவதோடு துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்சினை தொடர்பாகக் கிராமவாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், பாலம்போட்டாறு பத்தினிபுரம் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் குப்பை மேடு அமைந்துள்ளது.
நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை
இதில் வீசுகின்ற துர்நாற்றம் காரணமாகப் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் அப்பகுதியில் வசிப்போரும் பல அசௌகரியங்களுக்குள்ளாகுவதாகவும், குப்பை மேட்டிலிருந்து பத்தினிபுர கிராமத்துக்கு இருநூறு மீட்டர் தூரம் உள்ளது, பகல் நேரங்களில் வரும் காட்டு யானைக் கூட்டங்கள் இரவு நேரங்களில் கிராமத்துக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பல தடவைகள் பிரதேசசபைக்கு அறிவித்தும் இதுவரைக்கும் எந்தவொரு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர் .
எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி விரைவில் இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
யானை வேலிகளை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
