தம்பலகாமம்- தாயிப் நகர் கோயிலடி வீதியை புனரமைக்க கோரிக்கை
சீரற்ற காலநிலை காரணமாக நீரில் மூழ்கிய தாயிப் நகர்- தம்பலகாமம் ஊடாக கோயிலடி, வைத்தியசாலை செல்லும் பிரதான வீதியை புனரமைத்து தருமாறு பாதசாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட குறித்த வீதி ஏற்கனவே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்ட நிலையில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலையின் பின் காணாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெள்ள நீர் வடிந்தோடிய நிலையில் மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் குறித்த வீதியை பலர் பயன்படுத்தியும் வருகின்றனர்.
வீதி சேதம்
குறித்த வீதியின் இரு புறங்களிலும் காபட் பாதையானது நான்கு கிலோ மீற்றர் வரை காணப்பட்டாலும் ஒரு பகுதி முற்றாக நாசமாகி உடைந்து நொருங்கியதால் இவ் வீதி ஊடாக பயணிக்க முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக பயணிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி ஊடாக தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலை, பாடசாலை போன்றன காணப்படுகின்றன.
கோரிக்கை
தினமும் பாடசாலை மாணவர்கள்,கர்ப்பிணி தாய்மார்கள்,பொது மக்கள்,அரச அதிகாரிகள் என பல நூற்றுக் கணக்காணவர்கள் கிண்ணியா, கந்தளாய் தம்பலகாமம் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

கனமழை காரணமாகவும் சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக முழுமையாக சேதமடைந்த இவ் வீதியை உடனடியாக புனரமைப்புச் செய்து தருமாறும் உரிய அதிகாரிகளிடத்தில் பயணிப்போர் கோரிக்கை விடுக்கின்றனர்.


