தமிழ் அரசியல் கைதிகளையும் விரைவாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளையும் தேர்தலுக்கு முன்னர் விரைவாக விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(21.03.2024) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தொடர்ச்சியான கோரிக்கை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் அரசியல் கைதிகள் பலர் நீண்ட காலமாகச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
இதற்கமைய சிலர் விடுவிக்கப்பட்ட போதிலும் இன்னமும் 12 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஆகையினால் அவர்கள் அனைவரையும் விரைவாக விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக செய்தி- ராகேஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |