கோட்டாவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவியை வழங்குமாறு கோரிக்கை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு செயலாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கடந்த காலங்களில் நாட்டில் சகல விடயங்களிலும் நேரடியான தீர்மானங்களை மேற்கொண்டதால் அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது.
கால அவகாசம்
அவர்கள் எங்கள் தலைவர்கள். அவர்களின் உயிர் ஆபத்தில் இருப்பது குறித்து நாம் அஞ்சுகிறோம்.
கடந்த காலத்தில், இவை அனைத்திற்கும் எதிராக தைரியமாகவும் நேரடியாகவும் முடிவுகளை எடுத்த தலைவர்களை தற்போது சாடாதீர்கள்.
நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை கோட்டாபயவிற்கு வழங்கி அவருக்கு ஒரு மாதம் கால அவகாசம் கொடுங்கள். அவர் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து காட்டுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam
