இலங்கை - இந்திய கப்பல் சேவையை சிறப்பாக நடத்த முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கான கப்பல் சேவையை சிறப்பாக நடத்துவதற்காக, மதுரை - புனலூர் இரவுநேர விரைவு தொடருந்து சேவையை நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்குமாறு தொடருந்து பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த செய்தியை இந்திய நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் நாகப்பட்டினத்தில் இருந்து இந்த கப்பலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பயணிகள் சங்கங்கள்
எனினும், தற்போது நாகப்பட்டினம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு இடையே நேரடி தொடருந்து சேவை நடத்தப்படுவதில்லை.
இந்தப்பிரச்சினைக்கு தீர்வு காண, மதுரை - புனலூர் தொடருந்து சேவையை, நாகப்பட்டினம் அல்லது காரைக்கால் வரை நீடிக்க வேண்டும் என்று பயணிகள் சங்கங்கள் தொடருந்து துறையை வலியுறுத்தியுள்ளன.

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
