வெசாக் தினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சாஸ்திர ரீதியான ஆலோசனைகளின்படி, சரியான நட்சத்திரம் கூடிவரும் மே 30 ஆம் திகதியை அதிகாரப்பூர்வ வெசாக் தினமாக மாற்றியமைக்குமாறு மதகுருமார்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2026 ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பூரணை தினங்கள் வருவதால், அவற்றில் எதனை வெசாக் தினமாக அறிவிப்பது என்பது குறித்து பௌத்த மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாஸ்திர ரீதியான ஆலோசனை
தற்போதைய அரச நாட்காட்டியில் மே முதலாம் திகதி வெசாக் தினமாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அன்றைய தினம் அதற்குரிய நட்சத்திர பொருத்தம் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பண்டைய சாசன மரபுகளைப் பேணுவதற்காகவும், குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவும் மே 30 ஆம் திகதியை அதிகாரப்பூர்வ வெசாக் தினமாக மாற்றியமைக்கும் இந்த திருத்தம் அவசியமென அவர்கள் கருதுகின்றனர்.
எனவே, அன்றைய தினத்தில் சகல அரசு விழாக்களையும் மற்றும் சமய நிகழ்வுகளையும் நடத்துவதற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
தமிழகத்தில் முதல் நாளில் மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள விஜய்யின் ஜனநாயகன்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam