யாழ். வடமராட்சியில் மணல் அகழ்விற்கான அனுமதியை நிறுத்துமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
பல வருடங்களாக தொடர்ச்சியாக அனுமதிபத்திரத்துடன் கட்டைக்காடு பகுதியில் மணல் அகழப்பட்டு வருகிறது. இதனால் குறித்த பகுதி பாரிய குழியாக காணப்படுகிறது.
சட்டவிரோத நடவடிக்கைகள்
அருகில் பல குடும்பங்கள் வசிப்பதால் இயற்கையால் குறித்த குடும்பங்கள் நீரில் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் அனுமதிபத்திரத்துடன் அனுமதி பத்திரத்திற்கு அதிகமாக தொடர்ச்சியாக மணல் அகழப்பட்டு வருவதாலும் தொடர்ந்து மணல் அகழ்வதற்கு அனுமதி பத்திரம் வழங்குவதை உடன் நிறுத்துமாறு கட்டைக்காடு சென் மேரிஸ் விளையாட்டு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிதாக திருமணம் முடிப்பவர்களுக்கு காணிகள் வழங்குவதற்கு இடம் இன்மையாலும் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த மணல் அகழும் இடத்தை பார்வையிட்ட பருத்தித்துறை பிரதேச சபையின் 12 ஆம் வட்டார உறுப்பினர் பி.அலஸ்ரன் குறித்த பகுதியில் மணல் அகழப்படுவதற்கான அனுமதியை உடன் நிறுத்துமாறு கடிதம் மூலம் கிராம அலுவலரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கட்டைக்காடு பகுதிகளில் இடம் பெற்று வரும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக சென்மேரிஸ் விளையாட்டு கழகம் பல தீர்மானங்களை எடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam