தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானப் பீடத்தின் 2022-23 தொகுதி மாணவர்கள், வளாகத்தில் உள்ள விடுதி வசதிகள் பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
விடுதி வசதிகள் இல்லாததால் தாங்கள் தற்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாகவும், இதன் விளைவாக, ஒரு சிற்றுண்டிச்சாலையில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு
இந்த சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், தங்கள் கல்விப் பொறுப்புகளில் உறுதியாக இருப்பதாகவும், நாளை திட்டமிடப்பட்ட விரிவுரைகளில் கலந்து கொள்ளத் தயாராக இருப்பதாகவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
நிலைமை தமது கல்வி முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க தடையாக மாறியுள்ளதால், மேலும் தாமதமின்றி இந்தப் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குமாறு மாணவர்கள் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




